
நாளை முதல் விசேட ரயில்- பஸ் சேவை
புதுவருடத்தை முன்னிட்டு தூர மற்றும் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி , நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை, விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.