நாளை முதல் பெரல்கள் – கேன்களுக்கு இல்லை

நாளை செவ்வாய்க்கிழமை அழுலாகும் வகையில், பெரல்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்நடவடிக்கை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்