Sri Lanka Tamil News Site

நாளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பு ?

- Advertisement -

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் நாளை புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சகத் திணைக்களத்துக்கு நாளை புதன்கிழமை அனுப்பி வைப்பதற்கு முன்னதாக உறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -