Sri Lanka Tamil News Site

நாளையும் மூன்று மணிநேர மின்வெட்டு

- Advertisement -

நாளை செவ்வாய்க்கிழமையும் நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்க, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

- Advertisement -

கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதேவேளை, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!