நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கனடாவில் கின்னஸ் சாதனை
கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த “போங்க்” (BONK) மற்றும் “கொரிய கே9 ஆர் அமைப்பு” (KK9R) இணைந்து, இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மீட்கப்படும் பப்பிகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி, தென்கொரியாவில் உள்ள கோசன் நகரில், கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியது.
இதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 தெருநாய்களை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். இதற்கு முன்பு 36 நாய்களுடன் வாக்கிங் சென்றதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த பெருமைக்கு சொந்தக்காரரான மிட்செல் ரூடி தன்னுடன் வாக்கிங் வந்த நாய்கள் அனைத்தும் நல்ல உடல் திறன் கொண்டவை என்கிறார். இந்நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கலாமென கே.கே9.ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இவரின் வீடியோவை பார்த்து “இது அல்லவோ சாதனை” என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்