நாயை தாக்கி கொலை செய்த சகோதரர்கள் கைது
நாய் ஒன்றைத் தாக்கிக் கொலை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
காலி – அக்மீமன பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாய் ஒன்றை தாக்குவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் கிடைக்கப்பெற்ற, தகவல்களுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்