நாட்டை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக பதவிவகித்த அஜிட் நிவார்ட் கப்ரால், அப்பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்கே நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபயவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.