
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 5 பேர் மரணம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹோ, மனம்பிட்டி, பலாங்கொடை மற்றும் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருணாகல் – மஹோவில், வெலிவேரியவைச் சேர்ந்த தம்பதியினர் வேன் மரத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிர் இழந்துள்ளனர்.
இரத்தினபுரி – பலாங்கொடையில் தந்தை லொறியை பின்நோக்கி செலுத்தியதில் சிக்குண்டு 1 வயது 7 மாதம் பூர்த்தியடைந்த சிறுவன் உயிர் இழந்ததுடன் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலநறுவை – மனம்பிட்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மகுல்பொத்தவைச் சேர்ந்த 81 வயதுடைய பாதசாரி உயிர் இழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த 59 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாட்டுடன் மோதி உயிர் இழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்