
நாடு முழுவதும் சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்கத் தீர்மானம்!
நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையம் ஒன்று இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டில் 150 சதொச விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்