நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது
இதன்போது பேஸ்புக் நேரலை மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார்.
இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள்,
வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது. அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டோம்.
இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும், ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்