நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றின் சபை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 5 நிமிடங்களுக்கும் அதிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாய்மூல கேள்வி ஒன்றை எழுப்பிய சந்தர்ப்பத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை மத்திக்கு பிரவேசித்தனர்.

அத்துடன், எதிர்கட்சி தலைவரின் அருகில் செல்ல முற்பட்டதை அடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனால், சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்