Sri Lanka Tamil News Site

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு சந்திப்பு

- Advertisement -

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற விசேட குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கட்சியின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!