‘நாங்கள் ஆற்றில் விழுந்து சாகிறோம், பிள்ளைகள் யானையிடம் சாகட்டும்’ : மட்டு.கிரானில் அவலநிலை!

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு கிரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதும், பிரதேச செயலகம் தமக்கு உரிய  உதவிகளை வழங்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மட்டக்களப்பு கிரான் பாலம் வெள்ளத்தினால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில், முறுத்தன்ன, கோராவெளி போன்ற கிராமங்களில் இருந்து கிரானிற்கு அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் படகு மூலம் வந்த மக்கள், இப்போது தமது கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வழியின்றி தவிக்கின்றனர்.

“இவ்வாறு மீண்டும் திரும்பிவர படகு இல்லை என்று தெரிவித்திருந்தால்,  நாங்கள் கிரானிற்கு வந்திருக்க மாட்டோம். இப்பொழுது எங்களுடைய ஊர்களுக்கு திரும்பிந் செல்ல வழியில்லை, எமது பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு வந்துள்ளோம்” என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.