Sri Lanka Tamil News Site

நல்லூர் ஆலய தேர்த் திருவிழா : திருடர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்

- Advertisement -

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளை காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி தேர்த் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் , ஆலையத்திற்கு வருகை தரும் அடியவர்கள் நகைகள் அணிவதையும் , பணத்தை எடுத்துச் வருவதையும் தவிர்க்குமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

- Advertisement -

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது. எனினும் இம்முறை வழமை போன்று இலட்சக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பர்.

வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக் கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும் எனவும் ,வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!