நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று வவுனியாவில்
-வவுனியா நிருபர்-
பொது வேட்பாளர் அரியநேத்திரனின் நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று புதன் கிழமை வவுனியாவை அடைந்தது.
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினால் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரால் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளினை முன்னிறுத்தி பொத்துவில்தொடக்கம் பொலிகண்டிவரையான தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணம் இன்று மாலை வவுனியாவை அடைந்தது. இதன்போது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நகரவியாபார நிலையங்களில் பிரச்சாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை குறித்த பயணம் இங்கிருந்து திருகோணமலை நோக்கிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்