நண்பரின் காதல் விவாகரத்தில் ஈடுபட்ட இளைஞன் கொலை

இந்தியாவில் திருச்சி அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நண்பரின் காதல் விவாகரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ள நிலையில், நாகேந்திரனை காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது நண்பர் ஒருவர் அப்பெண்ணை அணுகி வலியுறுத்தியுள்ளார். இதனை செல்ஃபோனில் பதிவு செய்து தமது அண்ணனிடம் அப்பெண் காட்டியதாக தெரியவந்துள்ளது

மேலும் இது தொடர்பாக நாகேந்திரனை அப்பெண்ணின் அண்ணன் தட்டிக் கேட்டதாகவும், உடனே தமது நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று நாகேந்திரன் பதிலுக்கு மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொண்டதாகவும், அதில் நாகேந்திரனின் நண்பர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பொலிஸார்ர் குவிக்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்