நண்பன் மீதான அன்பினால் ஆயுள்தண்டனை பெற்ற 26 வயது இளைஞன்!

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில், 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக, 26 வயது இளைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன வழங்கினார்.

தேவராஜா லோரன்ஸ் (வயது 26) என்ற திருமணமாகாத இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நண்பருக்கு உணவு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாளியின் அடிப்பகுதியில் 25.09 கிராம் ஹெராயினை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றபோது, சந்தேகநபர், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர்ந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்