நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டணி மகள் மரணம்

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா 16 வயது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை பொலிஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது அறையில் வழக்கம் போல் உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி அவரது மகளின் அறைக்கு சென்றபோது மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உதவியுடன் கீழே இறக்கி காரிy; காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் வீட்டிலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தேனாம்பேட்டை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்