நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கொள்ளை : இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளரிடமிருந்து, 3 மில்லியன் ரூபாய் பணத்தை, மிரட்டி பறித்த குற்றச்சாட்டில், இராணுவ வீரர் மற்றும் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மாவட்ட முகாமையாளர் என இரண்டு பேர், நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

39 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் இருவரிடமிருந்து, 2 மில்லியன் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் என்று கூறி, சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள குறித்த நகைக் கடைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் போலியான பிடியானையை காட்டி, குறித்த கடை உரிமையாளரிடம், அவர் விடுதலைப்புலிகளின் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக, மிரட்டியுள்ளனர்.

குறித்த தங்கத்தை, கொழும்பு நீதிமன்றில் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து, 3 மில்லியன் ரூபாய் பணத்தை கடை உரிமையாளரிடம் இருந்து வற்புறுத்தி பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM