தோற்ற தரப்புக்கும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து கட்டியெழுப்பும் பொறுப்புள்ளது!
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றாகும். நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு தற்போது பன்முக பல சவால்களை எதிர்கொள்கிறது. சிறுவர் தினம் முதியோர் தினம் குறித்து பேசும் போது கூட இலட்சக்க கணக்கான பிள்ளைகள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்களும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மஹரகம தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. நாட்டிற்கு தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன.
இந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.