தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதை தடுத்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்