தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி 2024ஆம் ஆண்டில் 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்