தொடர் குடியிருப்பில் தீ விபத்து : ஐந்து வீடுகள் சேதம்

-வி.தீபன்ராஜ்-

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாபீல்ட் தோட்டம் இலக்கம் ஒன்று தொடர் லயன் குடிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜந்து வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு எட்டு முப்பது மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் 24 வீடுகள் கொண்ட தொடர் லயன்குடியிருப்பில் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், நான்கு வீடுகள் பகுதி அளவில் சேதமாகியுள்ளது

இதன் போது 5 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களின் வீட்டில் தற்காலிகமாக தங்கவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

திடீரென லயன் குடியிருப்பில் தீ பற்றிக் எரியத் துவங்கியதும் விபரீதம் நடப்பதை அறிந்துகொண்ட அயலவர்கள் இணைந்து, நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

அதேவேளை,  தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை எனவும், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்