தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 10 நாட்களில் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை நாடுமுழுவதிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் 12,000 மெட்ரிக் டன் எரிவாயு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.