தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான், வீரபத்திரர், பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக கிரியாரம்பம் 30.01.2025 திகதி காலை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு கடந்த 31ஆம் திகதி மற்றும் 01ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இந்நிலையில் இன்று காலை 8.21 மணி முதல் 10.33 மணி வரையுள்ள சுபமுகுர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.

கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று எதிர்வரும் 13.02.2025 திகதி சங்காபிஷேகம் இடம் பெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க