தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவித்தல்

தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.

இதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா மற்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும், .புதிய தேர்தல் முறை தொடர்பான வரைவு முன்மொழிவு குறித்து அரசியற் தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும், எனவும் அவர்கள் தெரிவித்தனர்.