தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக ஆட்சேர்ப்பு?
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பகிரப்படும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.
அதில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாகப் பகிரப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், சரியான மற்றும் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ ஊடகங்களின் ஊடாக இணைந்திருங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்