தேர்தலை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் கண்காணிப்பாளர்கள் இங்கு வந்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம் ஆறு தடவைகள் இலங்கை தேர்தல் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர் பணியானது பார்வையாளர்களின் வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளதுடன் பிரதி பிரதான கண்காணிப்பாளர் மற்றும் ஒன்பது தேர்தல் நிபுணர்கள் அடங்கிய பிரதான குழு ஏற்கனவே கொழும்பு வந்துள்ளனர்.

26 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் பணியில் இணைந்துகொள்வதுடன், தேர்தல் பிரச்சாரத்தை பின்பற்றுவதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

அதன்பிறகு, 32 குறுகிய கால பார்வையாளர்கள் தேர்தல் வாரத்தில் பணியை வலுப்படுத்துடன், நாடு முழுவதும் பணியமர்த்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்