தேர்தலின் பின்னர் வெளிநாடு பயணமாகும் ரணில்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக தாம் வெளிநாடு செல்ல உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வெளிநாட்டு பயணத்தின் போது சிலர் உரைகளை ஆற்றுமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்