மூதூர் – இருதயபுரத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக களமிறங்கிய பெண் வேட்பாளர்

-மூதூர் நிருபர்-

தேசிய மக்கள் சக்தியில் மூதூர் பிரதேச சபையில் மூதூர் – இருதயபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வினோதநேசன் அனோஜா வின் மக்கள் சந்திப்பு மூதூர் – பட்டித்திடல் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி சார்பாக ஒரேயொரு பெண் வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன்.செல்லும் இடங்களில் ஆதரவு காணப்படுகிறது.

பாடசாலை,வீதி,மின் விளக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவதானிக்க முடிந்தது.மக்கள் பெண் வேட்பாளராக ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க