தேசிய மக்கள் சக்தியின் மன்னார் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் எமில் நகர் மற்றும் பனங்கட்டு கொட்டு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்வு மற்றும் பிரச்சார நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகரசபை வேட்பாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதன் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் களையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனிடம் கையளித்தது குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க