தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “திறன்மிகு தொழில் முனைவோர்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான திறன்மிகு தொழில் முனைவோருக்கான நிகழ்வானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “திறன்மிகு தொழில் முனைவோர்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டமானது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், தேசிய உற்பத்தித்திறன் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் எஸ்.அர்ச்சுதன்,
வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.புவனேந்திரன், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.