தேசபந்துவை பதவி நீக்கும் விவகாரம் : பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றம்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பில் குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டன, பிரேரணைக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க