தேங்கி நிற்கும் மழை நீர்: அசௌகரியங்களுக்குள்ளாகும் மக்கள்

-கிண்ணியா நிருபர்-

மழை நீர் வடிந்து ஓடாமல் தேங்கி நிற்பதால் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி மக்கள் மிகுந்த அசெளுகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்ணியா பகுதியில் மழை நீர் வடிந்தோடுவதற்குரிய வசதி இல்லாமை காரணமாக நீர் தேங்கி நிற்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ள அதே வேளை தற்போது நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இந் நிலையினை சீர் செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.