
தேக்கு மரப்பலகைகளுடன் ஒருவர் கைது
அம்பாறை – பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரங்கட பிரதேசத்தில், சட்ட விரோதமாக தேக்கு மரப்பலகைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழைமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரந்தலாவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழு இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, கைதான சந்தேகநபர் மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி வெட்டப்பட்ட 88 தேக்கு மரப்பலகைகள் சேரங்கட வனவள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேரங்கட வனவள திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.