Sri Lanka Tamil News Site

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வங்காளப் புலிக்குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு வாய்ப்பு

- Advertisement -

மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகள் நேற்று வியாழக்கிழமை முதல் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு சீன மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட ரொபின் என்ற வங்காளப் புலிக்கும் பெண் புலிக்கும் மார்ச் 5 ஆம் திகதி குட்டிகள் பிறந்தன இவை மூவரும் ஆண் குட்டிகளாகும்.

இந்த மூன்று குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சசாலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்று முதல் அந்த 3 புலிக் குட்டிகளையும் பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதேநேரம், குறித்த 3 புலிக் குட்டிகளுக்கும் பெயர்களைப் பரிந்துரைப்பதற்கான வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெயர்களை பரிந்துரைப்பவர்கள், தங்களது தகவல்களுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வந்து கையளிக்க வேண்டும் என மிருகக்காட்சிhலை திணைக்களம் அறிவித்துள்ளது.

மிருகக்கட்சிசாலையின் இணையத்தளத்தையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பயன்படுத்தி, குறித்த 3 வங்காளப் புலிக் குட்டிகளுக்கும் பெயர்களைப் பரிந்துரைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -