தெல்லிப்பழை துர்க்காதேவியின் தீர்த்த திருவிழா

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

காலை 6 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் எழுந்தருளி தீர்த்தமாடினார்.

வருடாந்த மகோற்வம் இன்று மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்