தெற்கு அதிவேக வீதியில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் ஏலவே ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று சனிக்கிழமை காலை காலி நோக்கி வேனில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி