அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி – 12 சுற்றுலாப் பயணிகள் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மத்தள நோக்கிச் சென்ற வாகனம், இன்று அதிகாலை 5.15 மணியளவில் அபரெக்க மற்றும் பெலியட்டை இடையே முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதே நேரத்தில் வாகனத்தில் இருந்த 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் பெலியட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM