-யாழ் நிருபர்-
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை பகல் வேளையில் திருட்டு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில், சி.சி.ரிவி காமராவில் பதிவாகிய காணொளி ஆதாரத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த சி.சி.ரிவி காணொளியில் நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையை மாற்றிச் செல்வதும் காமராவில் பதிவாகியுள்ளது
குறித்த சி.சி.ரிவி காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
குறித்த காணொளியில் பதிவாகிய நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலித செனவிரட்ன அவர்கள் மக்களிடம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்கள் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்