தென்னாப்பிரிக்க அணித்தலைவி படைத்த புதிய சாதனை

 

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஒரு சீசனில் அதிக ஓட்டங்களை குவித்த வீராங்கனை என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணித்தலைவி லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) படைத்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சதம் விளாசியதையடுத்து அவர் குறித்த சாதனையை தன்வசப்படுத்தினார்.

இதன்படி குறித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவர் 571 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதில் 2 சதங்களும் 3 அரைசதங்களும் உள்ளடங்குகின்றன.

முன்னதாக இந்த சாதனை அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி வசமிருந்தது.

அவர் கடந்து 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரில் 509 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அந்த சாதனையை லாரா வோல்வார்ட் தற்போது முறியடித்துள்ளார்.