தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள மக்கள் வங்கிக்கு அருகில் பின்புறத்தில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.