துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

வெலிகந்த, காலிங்கவில பகுதியில் T-56 ரக துப்பாக்கி, மற்றும் 11 உயிருள்ள தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 11 ஆம் திகதி பொலிஸாரால் வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கடந்த 14 ஆம் திகதி வெலிகந்த பகுதியில் மற்றொரு சந்தேக நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் 18 உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் மற்றொரு T-56 ரக துப்பாக்கியை 200,000 ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM