துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஒருவர் படுகாயம்

அம்பலாங்கொடை கலகொடவில் இன்று புதன்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் குலீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.

அம்பலாங்கொடை உறுவத்தையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்புபட்டிருக்கலாம் என,  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.