காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
காலி – அஹுங்கல நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஹுங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்