
துப்பாக்கிச்சூட்டில் 2 நீதிபதிகள் பலி!
ஈரான் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெஹ்ரானில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் சம்பவ இடத்திலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்