தீ வைப்பு சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

நுகேகொட, மிரிஹான பெங்கிரிவத்த வீதிச் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹான பெங்கிரிவத்தை வீதிச் சந்தியில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அருகில் இருந்த பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற அமைதியின்மை தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள் – 071 859 1755 , 071 859 4929 ,011 2 444 265