தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த ஜீன் 20ஆம் திகதி இரவு தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

மருதங்கேணியைச் சேர்ந்த சரவணபவானந்தன் சிவகுமார் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளராகவும், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் இயக்குனருமாக செயற்பட்டு வந்தார்.

குறித்த நபர் தீக்காயத்திற்கு உள்ளானதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்