திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம்

-கிண்ணியா நிருபர்-

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம் அண்மையில் திஹாறிய வாரன வீதியில் அமைந்திருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் அதிபர் ஏ.ஜெ.எம். புர்க்கான் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக இலங்கை ஒலிபர்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.ஜெ.எப்.றினூசியா மற்றும் மேமன் நலன்புரி மன்றத்தின் பொது முகாமையாளர் ஆசிரியர் நூர்தீன் யாகூப் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உபதலைவர் அஸ்மி அஸ்ரப் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறை வேற்றுக்குழு செயலாளர் சஹ்னி மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.அர்பகான் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். நிகழ்வின் நன்றி உரை சிராஜ் நாபி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

நாட்காட்டிக்கான அனுசரணை வழங்கியோருக்கான நினைவுச்சின்னங்களும் அதிபரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் 50 இற்கும் மேபட்டோருக்கான நாட்காட்டியின் முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்