திருமலை ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 35 பேருக்கான உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை உவர்மலைப்பிரிவில் அமைந்துள்ள அகம் மனிதாபிமான வள நிலையத்தில் நடைபெற்றது.

மிகவும் கடினமான காலப்பகுதிகளில் ஊடக செயற்பாடுகளில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டமையை கௌரவப்படுத்தும் முகமாகவும் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு மற்றும் றமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாகவும் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக ஊடக உத்தியோகத்தர், மாவட்ட செயலக அரச சார்பற்ற ஒருங்கிணைப்பாளர், மனிதாபிமான வள நிலை ஒருங்கிணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

dry ration
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்